எதிர்பார்த்து ஏமாந்த பாரதி கண்ணம்மா ரசிகர்கள்! அடுத்த வார ப்ரொமோ
பாரதி கண்ணம்மாவில் இந்த வாரம் எதாவது ஒரு பெரிய ட்விஸ்ட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கண்ணம்மா பிறந்தநாள் பார்ட்டியில் லக்ஷ்மியின் அப்பா யார் என்பதை அறிவிக்கப்போவதாக கூறி இருக்கிறார்.
ஆனால் அந்த பார்ட்டிக்கு வர முடியாது என பாரதி கூறி வருகிறார். அங்கு வந்தால் ஒரு பெரிய ரகசியத்தை சொல்வதாக கண்ணம்மா கூறுகிறார், அதன் பிறகு வெண்பா அவரை functionக்கு செல்லும்படி கூறுகிறார். இதனால் என்ன பிரச்சனை வெடிக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் தற்போது அடுத்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாரதி அங்கு சென்று லக்ஷ்மியிடம் 'உன் அப்பா அம்மா எல்லாமே கண்ணம்மா தான் என சொல்கிறார்.
சீரியலில் ட்விஸ்ட் வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்து இருக்கிறது.