பிறந்தநாளுக்கு வருவாரா பாரதி? கண்ணீர் விட்டு அழுத கண்ணம்மா! இன்றைய எபிசோடு அப்டேட்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் ஒரு பெரிய ட்விஸ்ட் விரைவில் வரப்போகிறது. கண்ணம்மா தனது மகள் லக்ஷ்மியிடம் அப்பா யார் என்கிற உண்மையை பிறந்தநாள் பார்ட்டியில் சொல்ல போவதாக வாக்கு கொடுத்து இருக்கிறார். அதற்காக கண்ணம்மா பாரதிக்கு போன் செய்து பேசியும் அவர் வர முடியாது என உறுதியாக சொல்லிவிடுகிறார். அதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
மறுநாள் பள்ளிக்கு பாரதி வரும் போது அங்கு கண்ணம்மாவும் இருக்கிறார். 'லக்ஷ்மி ஏன் ஸ்கூலுக்கு வரல' என ஹேமா கேட்க, அவள் அப்பாவை வரவேற்க வீட்டை டெக்கரேட் செய்து கொண்டிருக்கிறாள் என சொல்கிறார். இருப்பினும் பாரதி இதை கண்டுகொள்ளாமல் தான் நிற்கிறார்.
அதன் பிறகு கண்ணம்மா நேராக மாமியார் வீட்டுக்கு சென்று அழுது புலம்புகிறார். பாரதியை எப்படியாவது பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து வந்துவிடுங்கள் என கெஞ்சுகிறார். அதை பார்த்து அவர்களும் கலங்குகிறார்கள். தான் பொய் சொல்லியாவது பாரதியை அழைத்து வருகிறேன் என அகிலன் கூறுகிறார்.
கண்ணம்மா அங்கு இருக்கும்போதே பாரதியும் வீட்டுக்குள் வருகிறார். இவள் ஏன் இங்கே வந்தாள் என கேட்டு சண்டை போடுகிறார். கண்ணம்மா என் மருமகள், வருவதற்கு முழு உரிமையும் இருக்கிறது என சொல்லி அம்மா சௌந்தர்யா பதிலடி கொடுக்கிறார்.
அதன் பின் கண்ணம்மா மீண்டும் பாரதியை தனது பிறந்தநாள் functionக்கு வரும்படி அழைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.