வசமாக மாட்டிக்கொண்ட வெண்பா! இந்த அசிங்கம் தேவையா? பாரதி கண்ணம்மாவில் இன்று
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்களே எதிர்பார்க்காத பல திருப்பங்கள் சமீப காலமாக வந்துகொண்டிருக்கிறது. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ தொடங்கியது, முதல் வெண்பா சிறைக்கு சென்றது வரை பல திருப்பங்கள் நடந்திருக்கிறது.
இந்நிலையில் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் கண்ணம்மா உடல்நலக்குறைவாக இருக்கும் பாரதியை அன்பாக பார்த்துக்கொள்கிறார்.
மேலும் வெண்பா மருத்துவர் தொழில் செய்யக்கூடாது என கோர்ட் உத்தரவு போட்ட பிறகும் அதை மீறி வெண்பா ஹாஸ்பிடலில் சிகிச்சை அளித்து கொண்டிருக்கிறார். அவர் ஜெயிலுக்கு போன டாக்டர் என ஒரு பெண் கண்டுபிடித்து விடுகிறார். அது பற்றி அவர் எல்லோரிடமும் கூற வெண்பா பெரிய ரகளையே செய்து அனைவரையும் ஹாஸ்பிடலை விட்டு துரத்துகிறார்.
இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது.
அழகு ❣️
— Vijay Television (@vijaytelevision) January 7, 2022
பாரதி கண்ணம்மா - இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/wmozLHfTXf