பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் நடக்கவில்லை. அதன் பின் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டால் சீரியல் முடியும் என எதிர்பார்த்தார்கள்.
நேற்றைய எபிசோடில் அதுவும் நடந்துவிட்டது. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சமாதானம் ஆகி ஒன்று சேர்ந்துவிட்டார்கள். ஆனால் அப்போதும் எபிசோடு இறுதியில் 'தொடரும்' என போட்டதால் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
கிளைமாக்ஸ் ப்ரோமோ
இந்நிலையில் தற்போது கிளைமாக்ஸ் இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. டைவர்ஸ் வாங்கி பிரிந்துவிட பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைப்பது தான் இந்த வாரம் வர இருக்கிறது.
திருமணத்திற்கு எல்லோரும் உடை எடுக்க செல்ல, முகூர்த்த புடவையை நானே நெய்து தருவதாக சொல்லி அந்த வேலையில் இறங்குகிறார். பாரதி டாக்டர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையையும் செய்வார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
'போன வாரமே முடித்திருக்கலாம்' எனவும் பலரும் இயக்குனரை கமெண்டில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
