பாரதி கண்ணம்மாவில் வரும் இன்னொரு பெரிய ட்விஸ்ட்! வில்லி நடிகை கொடுத்த ஹின்ட்
பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. சமீப காலமாக இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் குறைந்துவிட்ட நிலையில் தற்போது பரபரப்பை கூட்ட ஒரு புது கதாபாத்திரத்தை களமிறக்கி இருக்கின்றனர்.
வெண்பாவின் அம்மா
வில்லி வெண்பாவின் அம்மா ரோலில் நடிகை ரேகா நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் வந்ததும் முதல் வேலையாக பாரதியை சந்தித்து அவர் எப்போது வெண்பாவை திருமணம் செய்வார் என கேட்டு ஷாக் கொடுக்கிறார்.
இனி ரேகா தான் புது வில்லியா? என்னவெல்லாம் நடக்குமோ என சீரியல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ட்விஸ்ட் இருக்கு
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொன்ன வில்லி நடிகை ஃபரினா ஆசாத் 'இன்னொரு ட்விஸ்ட் இருக்கு. தொடர்ந்து பாருங்க' என கூறி இருக்கிறார்.