பாரதி காரில் விழுந்த லட்சுமி.. பாரதி கண்ணம்மாவில் எதிர்பார்க்காத சம்பவம்
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி எப்போது தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார்? அது நடந்தால் மொத்த பிரச்னையும் ஒரே நாளில் முடிந்துவிடும் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் அது இப்போதைக்கு நடப்பதாக தெரியவில்லை.
இன்றைய எபிசோடில் பாரதி தனிமையில் இருப்பதாய் உணர்ந்து மகள் ஹேமாவே அவரை இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி கேட்கிறார். ஆனால் அதை ஓட்டு கேட்டுவிடும் வெண்பா ஒரு சதி திட்டம் போடுகிறார்.
மேலும் ஒரு புது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் பாரதி காரில் சென்றுகொண்டிருக்கும்போது லட்சுமி வந்து விழுந்துவிடுகிறார். அவரை அழைத்துக்கொண்டு பாரதி காரில் கண்ணம்மா வீட்டுக்கு செல்கிறார்.
ஹேமா மற்றும் லட்சுமி இருவரையும் வெளியில் அனுப்பிவிட்டு கண்ணம்மாவை திட்டுகிறார் பாரதி. அவர் குழந்தைக்கு அப்பா போல பேசுவதை கேட்டு கண்ணம்மா கண்களில் ஆனந்த கண்ணீர்.
இப்படி ஒரு ட்விஸ்ட் ரசிகர்களே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். ப்ரோமோ பாருங்க