பாரதியை மறந்துடுறேன்.. பல்டி அடித்த வெண்பா! பாரதி கண்ணம்மா அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த வாரம் வெண்பாவை போலீசார் மீண்டும் கைது செய்து கொண்டு செல்வது போல காட்டப்பட்டது. அதனால் அவரது காட்சிகள் சீரியலில் குறையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது ஒரு ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது.
அதில் வெண்பாவின் அம்மா கோர்ட்டுக்கு வெளியில் ஒரு கண்டிஷன் போடுகிறார். நான் சொன்ன கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டால் இந்த கேசில் இருந்து வெளியில் வந்துவிடுவாய் என அவர் கூற, வெண்பாவும் ஒப்புக்கொள்கிறார்.
அதன் பின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வருகிறது. அதில் வெண்பா ரிலீஸ் செய்யப்படுகறார் . அவர் மகிழ்ச்சியாக வெளியில் வர.. அம்மா அங்கு நின்று வெண்பாவுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி சொல்கிறார்.
பாரதியை மறந்துவிடுவதாக வெண்பா உறுதியாக கூற, அடுத்த நாளே ஒரு மாப்பிள்ளை பெண் பார்க்க வருவதாக கூறுகிறார். அதை கேட்டு வெண்பா கடும் ஷாக் ஆகிறார்.