கோபத்தில் கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு! பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் சறுக்கலை சந்தித்து இருக்கிறது. ரோஷ்ணி கண்ணம்மாவாக நடித்து வந்த போது முதலிடத்தில் இருந்த இந்த தொடர் தற்போது டாப் 5ல் இடம்பிடிக்கவே போராடி வருகிறது. கடந்த வாரம் பாரதி கண்ணம்மா 10.4 புள்ளிகள் உடன் டிஆர்பியில் 4ம் இடமே பிடித்தது. சன் டிவியின் கயல், சுந்தரி மற்றும் வானத்தைப்போல தொடர்கள் முதல் மூன்று இடங்களை பெற்று இருந்தது.
இந்நிலையில் இந்த வாரம் பாரதி கண்ணம்மாவில் ஒரு பெரிய சம்பவம் நடைபெற இருக்கிறது. கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு வீட்டில் சின்ன பார்ட்டி வைத்து கேக் வெட்ட போவதாக லட்சுமி பாரதியை அழைப்பது போல நேற்றைய எபிசோடில் காட்டப்பட்டது.
அந்த பார்ட்டியில் லக்ஷ்மியின் அப்பா யார் என்கிற உண்மையை சொல்லபோவதாக கண்ணம்மா கூறுகிறார். அதனால் வரும் வாரம் பாரதி கண்ணம்மா பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.