பாரதி கண்ணம்மாவில் பெரிய ட்விஸ்ட்! லக்ஷ்மிக்கு தெரியவந்த உண்மை.. அடுத்த வார ப்ரோமோ
லக்ஷ்மிக்கு தெரியவந்த உண்மை: பாரதி கண்ணம்மா அடுத்த வார ப்ரோமோ
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் கடந்த சில வாரங்களாகவே லக்ஷ்மி தனது அப்பா யார் என தேடி அலைவது போல காட்சிகள் வந்தது. பாரதி தான் அப்பா என அவருக்கு தெரியவருமா என ரசிகர்களும் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் கண்ணம்மா உண்மையை மகள் லட்சுமியிடம் தொடர்ந்து மறைத்து வருகிறார்.
எதிர்பார்க்காத ட்விஸ்ட்
இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது. அதில் எதிர்பார்காத ட்விஸ்ட் ஒன்று வந்திருக்கிறது. லட்சுமி அட்ரஸ் கண்டுபிடித்து சென்று பார்க்கிறார். அது பாரதியின் வீடு தான்.
அங்கு உள்ளே சென்று பார்த்தால் பாரதியிடம் கண்ணம்மா நின்று பேசிக்கொண்டிருக்கிறார், 'நீங்க தான் அப்பா என லட்சுமியிடம் சொல்ல போகிறேன்' என கூறுகிறார். இதனால் லக்ஷ்மிக்கு மொத்த உண்மையும் தெரிய வருகிறது.