வெண்பா கர்ப்பம்! யாரோ குழந்தைக்கு நான் அப்பாவா? கொந்தளித்த பாரதி
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது தான் பாரதி மற்றும் கண்ணம்மா குடும்பம் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். இதோடு சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அது நடக்கவில்லை.
மறுபுறம் வில்லி வெண்பா ரோஹித் மூலமாக கர்பமாகிவிட்ட நிலையில் தற்போது வெண்பா பாரதியிடம் வந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சி இருப்பது இன்றைய எபிசோடில் வந்திருக்கிறது.
கெஞ்சும் வெண்பா
நான் பப் போனேன், அங்கு யாரோ எனக்கு தெரியாமல் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து சீரழித்துவிட்டார்கள். அது யார் என தேடினேன், கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்.
"முகம் தெரியாத ஒருவரின் குழந்தை எனக்குள் வளர்கிறது, இந்த நேரத்தில் என் அம்மா திருமண ஏற்பாடு செய்திருக்கிறார். குழந்தையை கலைக்க எனக்கு மனம் வரவில்லை. அதனால் என் குழந்தைக்கு இனிஷியல் வேண்டும் என்பதற்காக நீ எனக்கு தாலி கட்ட வேண்டும்" என பாரதியிடம் கெஞ்சுகிறார்.
ஆனால் பாரதி அதை கேட்டு கடும் அதிர்ச்சி ஆகி திட்டுகிறார். யாரோ குழந்தைக்கு நான் அப்பா ஆகணுமா என கேட்கிறார்.
இன்னும் சில காலத்திற்கு இந்த பிரச்சனை தான் ஓடப்போகிறது.
Barathi - Am i a joke to you.. ?
— Vijay Television (@vijaytelevision) September 28, 2022
பாரதி கண்ணம்மா - இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/c0HjQg9KWY
பிக் பாஸ் 6 வீட்டுக்குள் செல்லும் பாரதி கண்ணம்மா நடிகை! இவருமா?

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
