மொத்த உண்மையை போட்டுடைத்த கண்ணம்மா! அதிர்ச்சியில் உறைந்த பாரதி குடும்பம்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா மகள் லட்சுமிக்கு தனது அப்பா யார் என்கிற உண்மை தெரியவருமா இல்லையா என்கிற கேள்வியை தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். கண்ணம்மாவின் பிறந்தநாள் பார்ட்டியில் லக்ஷ்மியின் அப்பாவை அறிவிக்கப்போகிறேன் என கண்ணம்மா கூறிவிட்டு நிலையில், அந்த பார்ட்டிக்கு பாரதியும் ஒருவழியாக வந்து சேர்கிறார்.
ஹேமா என்னுடைய மகள் என கண்ணம்மா பாரதியிடம் உண்மையை சொல்கிறார், ஆனால் வழக்கம்போல பாரதி அது பொய் என கண்ணம்மாவை திட்டிவிட்டு போகிறார்.
அதன் பின் கண்ணம்மா லக்ஷ்மியிடம் உன் அப்பா இவர்தான் என உண்மையை சொல்லிவிடுவது போல இன்றைய எபிசோடில் இறுதியில் ஒரு காட்சி வருகிறது. இதுவாவது உண்மையா அல்லது யாராவது கனவு கண்டது போல நாளைய எபிசோடில் மாற்றி விடுவார்களா என நாளை தான் தெரியவரும்.
இது யாரோட கனவு? என கேட்டு இதை நெட்டிசன்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.