மோசமான நிலையில் விஜய் டிவி டிஆர்பி! கடந்த வார டாப் சீரியல்கள் முழு விவரம்
வழக்கமாக சன் டிவி தொடர்கள் மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி இருந்து வருகிறது. சமீப காலமாக விஜய் டிவி தொடர்கள் அதிகம் சறுக்கலை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கிறது.
அதில் வழக்கம்போல சன் டிவியின் கயல் சீரியல் தான் முதலிடம் பிடித்து இருக்கிறது. இரண்டாம் இடத்தை வானத்தைப்போல தொடரும், மூன்றாம் இடத்தை சுந்தரி சீரியல்கள் பெற்று இருக்கின்றன.
அதற்கடுத்த இடங்களில் ரோஜா மற்றும் ராஜா ராணி ஆகிய சீரியல்கள் இருக்கின்றன. டாப் 5 லிஸ்டில் விஜய் டிவி ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா தற்போது 8.36 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏழாம் இடம் மட்டுமே பிடித்து இருக்கிறது.