வெண்பா இஸ் பேக்.. வந்ததுமே இப்படி இறங்கிட்டாரே? சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல்
பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பாவாக நடித்து வந்த ஃபரினா ஆசாத் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து ஒரு மாதம் இடைவெளி எடுத்துக்கொண்டார். அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்து பெயர்சூட்டு விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
தற்போது வெண்பா மீண்டும் ஒருவழியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் சிறைக்கு சென்று இருப்பது போல தான் கடந்த ஒரு மாதமாக காட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெண்பா சிறையில் இருந்து வீடு திரும்புவது போல காட்டப்பட இருக்கிறது.
மேலும் வெண்பா சிறையில் இருந்து வெளியில் விடுவிக்கப்பட்டதும் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகள் கேட்கின்றனர். அதன் பிறகு வெண்பா வீட்டுக்கு வந்து மாயாண்டி மற்றும் வேலைக்காரி சாந்தி ஆகியோரிடம் பேசுகிறார்.
கண்ணம்மா ஜாலியாக பாரதி உடன் இருப்பது பற்றி கூறி வேலைக்காரி வெண்பாவை தூண்டிவிடுகிறார். இனிமேல் கண்ணம்மாவை டார்கெட் செய்வது தான் ஒரே வேலை என சொல்லி வெண்பாவும் கொந்தளித்து இருக்கிறார். இனி வழக்கம்போல கண்ணம்மா vs வெண்பா சண்டை தொடர போகிறது.
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாய்ங்களே.. ?
— Vijay Television (@vijaytelevision) December 30, 2021
பாரதி கண்ணம்மா - இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/hlrq9L6rFC