பாரதி கண்ணம்மாவில் வந்த பெரிய ட்விஸ்ட்! வெண்பா பாரதிக்கு கொடுத்திருக்கும் மோசமான பிளான்
பாரதி கண்ணம்மாவில் இன்று யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. கண்ணம்மா பிறந்தநாள் functionல் லட்சுமியின் அப்பா யார் என அறிவிப்பதாக கண்ணம்மா சொன்ன நிலையில் அந்த விழாவுக்கு வரவே மாட்டேன் என கூறி வருகிறார் பாரதி.
ஆனால் இன்றைய எபிசோடில் கண்ணம்மா நேரில் சென்று பாரதியை ஹாஸ்பிடலில் சந்திக்கிறார். பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தால் உங்களுக்கு ஒரு பெரிய ரகசியத்தை சொல்ல போகிறேன் என சொல்கிறார். ஆனால் அது எதை பற்றியது என்று க்ளு கூட கொடுக்காமல் கிளம்பி செல்கிறார்.
அந்த நேரத்தில் வெளியில் இருக்கும் வெண்பாவையும் கண்ணம்மா அசிங்கப்படுத்திவிட்டு செல்ல, அதன் பின் அவர் உள்ளே பாரதியும் சென்று 'நீ அந்த functionக்கு போ' என சொல்கிறார். மேலும் கண்ணம்மாவை அசிங்கப்படுத்த ஒரு புதிய ஐடியாவை அவர் கொடுக்கிறார்.
அதனால் பாரதி கண்ணம்மா பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வது உறுதியாகிவிட்டது. ஆனால் அங்கு என்ன எல்லாம் பிரச்சனை வருமோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.