ஐபிசி தமிழ் பாஸ்கரன் கந்தையா பெருமையுடன் தயாரித்துள்ள 'பொம்மை' திரைப்படம்.. மேடையில் கண்கலங்கிய பிரபலங்கள்
பொம்மை
ஐபிசி தமிழ் பாஸ்கரன் கந்தையா பெருமையுடன் தயாரித்துள்ள திரைப்படம் பொம்மை An Island Story. இப்படத்தை இயக்குநர் நவயுக குகராஜா இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மதுனி அலஹக்கோன் புஸ்ஸெவெலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, எம். ரஜினிகாந்த் இசையமைத்திருக்கிறார். திரைக்கதை - நவயுக குகராஜா மற்றும் வட்சு, எடிட்டிங் - மாருதி.கே, சவுண்ட் எபெக்ட்ஸ் - சி. சேது, சவுண்ட் டிசைன் - சிகே. பூபதி ராஜா.

இப்படம் போருக்குப் பிந்தைய சைக்கலாஜிக்கல் டிராமா என்கிற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
இப்படம், இலங்கை உள்நாட்டு போரில் உயிர் பிழைத்தவர்களின் உண்மை சம்பவங்கள் மற்றும் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 30 ஆண்டுகளாக உள்நாட்டு போரை அனுபவித்து, அதனால் பாதிக்கப்பட்ட உள்ளூர் நடிகர்களை கொண்டு, முழுவதுமாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
- சிறந்த அறிமுக இயக்குநர் - முழு நீள திரைப்படம் (லூலியா சர்வதேச திரைப்பட விழா, ஸ்வீடன் - 2025)
- சிறந்த பெண் திரைப்பட படைப்பாளர் (போடன் சர்வதேச திரைப்பட விழா, ஸ்வீடன் - 2025)
- சிறந்த அறிமுக இயக்குநர் (தமிழகம் சர்வதேச திரைப்பட விழா, இந்தியா - 2025)
அதிகாரப்பூர்வ தேர்வு - 2025
- எகிப்திய அமெரிக்க திரைப்பட விழா
- யோரா சர்வதேச திரைப்பட விருதுகள்
- சினி ராயல் சர்வதேச திரைப்பட விழா
கண்கலங்கிய பத்திரிகையாளர்
பொம்மை An Island Story திரைப்படம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதில் திரைப்பட விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் படத்தை பார்த்து நெகிழ்ந்தபோய் பாராட்டியுள்ளனர். மேலும், எழுத்தாளர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டபின் கண்கலங்கி பாராட்டியுள்ளார்.

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் - முதல்வர் விஜய் தொகுதியில் அதிர்ச்சி சம்பவம் IBC Tamilnadu