பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 06, 2026 03:00 AM GMT
Report

baththa movie 5 days box office collection: விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த பத்தா திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 5 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

பத்தா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் பத்தா. இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, சினி 1 ஸ்டூடியோ, A for Apple ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் | Baththa Movie 5 Days Worldwide Box Office

பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் கொடுத்த சூர்யாவின் 'சீன்'.. ரிலீஸுக்கு முன்பே சாதனை

பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் கொடுத்த சூர்யாவின் 'சீன்'.. ரிலீஸுக்கு முன்பே சாதனை

இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், சாய், சஹஸ்ர ஸ்ரீ, சாண்டி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

நடிகர்களின் பங்களிப்பு, வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவையான காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் என படத்திற்கு பலதரப்பட்ட மக்கள் பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் | Baththa Movie 5 Days Worldwide Box Office

விஜய் பற்றி இதுவரை வெளிக்காட்டாத விஷயத்தை கூறியுள்ள நடிகர் அஜித்... என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் பற்றி இதுவரை வெளிக்காட்டாத விஷயத்தை கூறியுள்ள நடிகர் அஜித்... என்ன சொன்னார் தெரியுமா?

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கும் பத்தா திரைப்படம் இதுவரை 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், 5 நாட்களில் உலகளவில் பத்தா எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் ரூ. 14 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US