பத்தா: திரை விமர்சனம்

By Karthick Raja Oct 01, 2026 08:15 AM GMT
Report
Baththa movie review: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவாகி இன்று வெளியாகியுள்ள பத்தா திரைப்படம் எப்படி உள்ளது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

பத்தா: திரை விமர்சனம் | Baththa Movie Review

கதைக்களம்

1986-ல் நடக்கும் கதைதான் பத்தா. சிறுவன் சபரி தனக்கு பிடித்த விளையாட்டு பொருளை அடம்பிடித்து வாங்க, அதனை விட்டு எப்போதும் பிரியாமல் விளையாடிக்கொண்டே இருக்கிறான். பள்ளிக்கு செல்லும்போதும் கூட விளையாடிக்கொண்டே இருக்கும் சபரி, அப்போது தெருவில் ஜோதி என்கிற ரவுடியை, பத்தா (விஜய் சேதுபதி) என்கிற ரவுடி இரக்கமற்ற முறையில் கொடூரமாக ரத்தம் தெறிக்க தெறிக்க அடிக்கிறார். இதைப்பார்த்து பயந்துவிடுகிறார் சபரி.

இதன்பின், பத்தா ஒரு கதவை கூட எளிதாக உடைத்துவிடுவார், அவர் வீட்டில் சிங்கம் வளர்க்கிறார் என தனது நண்பர்கள் கூற பத்தா மீது சபரிக்கு மிகப்பெரிய பயம் உண்டாகிவிடுகிறது.

பத்தா: திரை விமர்சனம் | Baththa Movie Review

இந்த சமயத்தில், சபரிக்கு முழு ஆண்டு பரீட்சை நடக்க, அப்போது அவர் அந்த விளையாட்டு பொருளுடன் ஆசிரியையிடம் மாட்டிக்கொண்டான். உடனே அந்த விளையாட்டு பொருளை Staff ரூமில் வைத்திருக்கிறார்கள். பள்ளி முழு ஆண்டு பரீட்சை இன்றுடன் முடிகிறது, இதனால் விளையாட்டு பொருளை இன்று வாங்கவில்லை என்றால், விடுமுறை முடிந்தபின்தான் வாங்க முடியும் என்கிற சூழ்நிலை உருவாகிறது.

பள்ளி முடிந்து விடுமுறை விட்டபின் அடுத்தநாளே அதிகாலையில், பள்ளிக்கு யாருக்கும் தெரியாமல் வந்து விளையாட்டு பொருளை எடுத்துவிட்டு கிளம்பும்போது, வயிறு கலக்கியதால் கழிவறை சென்றுவிட்டு அங்கிருந்து செல்கிறான். வெளியே வரும்போதுதான் தோன்றுகிறது, அவர் கதவை மூடாமல் வந்துவிட்டான் என்று.

பத்தா: திரை விமர்சனம் | Baththa Movie Review

பின், விளையாட்டு பொருள் எடுத்த கதவையும், கழிவறை கதவையும் பூட்டிவிட்டு செல்கிறார். இந்த சமயத்தில் திடீரென யாரோ, கழிவறை உள்ளே இருந்து கதவை தட்டுகிறார். உடனே கதவை திறக்க சபரி வர, 'டேய் நான் பத்தா டா, எவன் என்ன உள்ள வச்சு பூட்டுனது, நான் வெளியே வந்தா செத்த' என சொல்ல பயத்தில் கதை திறக்காமல் சென்றுவிடுகிறான் சபரி.

கதவை திறக்க முடியாமல் தவிக்கிறார் விஜய் சேதுபதி. பல வழிகளில் முயற்சி செய்து பார்த்தும் அவரால் கதவை திறக்க முடியவில்லை. உள்ளே மாட்டிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி வெளியே வந்தாரா? அவர் என்ன ஆனார்? அதன்பின் எந்த சிறுவன் என்னவெல்லாம் செய்தான் என்பதே படத்தின் மீதி கதை.

பகத் பாசிலின் Dont Trouble The Trouble படம் எப்படி உள்ளது... முதல் விமர்சனம்

பகத் பாசிலின் Dont Trouble The Trouble படம் எப்படி உள்ளது... முதல் விமர்சனம்

படத்தை பற்றிய அலசல்

இயக்குநர் பாலாஜி தரணீதரன் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் நம் அனைவரையும் கலங்க வைக்கும் திரைக்கதையோடு இப்படத்தை எடுத்துள்ளார். முதல் காட்சியில் தொடங்கி இறுதி வரை, அடுத்தென்ன அடுத்தென்ன என்று நம்மை யோசிக்க வைக்கிறார். அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

ஒரு விஷயம் நம் அருகில் இருக்கும் வரை அதனுடைய அருமை நமக்கு தெரியாது, அது நம்மை விட்டு போனால்தான் தெரியும் என்கிற உணர்வை விஜய் சேதுபதியின் பத்தா கதாபாத்திரம் மூலம் நமக்கு அழகாக கடத்தியுள்ளார். மேலும், ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கிறது, அடுத்தவனுக்கு பயணத்தை காட்ட வேண்டும் என்று நினைத்து ஒருவரை அடிப்பது கேவலமான முட்டாள்தனம், அவனுக்கும் குடும்பம் இருக்கிறது, அதையும் நினைத்துப்பார்ப்பது அவசியம் என காட்சிகள் மூலம் இயக்குநர் பாலாஜி தரணீதரன் புரியவைத்துள்ளார்.

பத்தா: திரை விமர்சனம் | Baththa Movie Review

பத்தா கழிவறையில் மாட்டிக்கொண்டு முதலில் மிரட்டுவது, அதன்பின் சூழ்நிலை மாறி தன்னை யார் அடைத்து வைத்திருக்கிறார் என்றே தெரியாமல் கெஞ்சுவது, ஒரு கட்டத்தில் இனி தனது குடும்பத்தையே சந்திக்கவே முடியாது என எண்ணி மனைவியையும், மகளையும் நினைத்து அழுவது என விஜய் சேதுபதி தனது நடிப்பில் மிரட்டிவிட்டார்.

அவருக்கு கொஞ்சம் கூட குறையாமல் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் குழந்தை நட்சத்திரம் நடிகர் சாய். சபரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய், கழிவறையில் உள்ள பத்தாவிற்கு உணவாக பொறை கொடுப்பது, அதன்பின் பத்தாவுடன் பயந்து பயந்து பழகுவது, பின் தனது மனதில் உள்ள உண்மையை பத்தாவிடம் கூறுவது என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.

பத்தா: திரை விமர்சனம் | Baththa Movie Review

பாலாஜி தரணீதரனின் இயக்கம், திரைக்கதை, நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு என அனைத்திற்கும் துணை நிற்கும் வகையில் தனது பின்னணி இசையால் மனதை தொடுகிறார் சாய் அப்யங்கர். ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு உள்ளிட்ட டெக்னீகள் ஒர்க்ஸ் அனைத்தும் சிறப்பு.

ஜெயிலர் 2 படத்தில் இப்படியொரு காட்சியா, U/A சான்றிதழ் கிடைக்குமா?

ஜெயிலர் 2 படத்தில் இப்படியொரு காட்சியா, U/A சான்றிதழ் கிடைக்குமா?

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • விஜய் சேதுபதி, சிறுவன் சாய்
  • நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
  • பின்னணி இசை
  • கதைக்களம், திரைக்கதை மற்றும் இயக்கம்
  • சொல்ல வந்த விஷயம்
  • ஒளிப்பதிவு

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • பெரிதாக ஒன்றும் இல்லை

மொத்தத்தில் பத்தா படத்தையும் தாண்டி ஒரு நல்ல பாடம்

பத்தா: திரை விமர்சனம் | Baththa Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US