பத்தா, சிக்மா படங்களின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது தெரியுமா? இதோ விவரம்
Baththa & Sigma movies OTT release: பத்தா மற்றும் சிக்மா படங்கள் எப்போது ஓடிடியில் வெளியாகின்றன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடி
திரையரங்கிற்கு வரும் திரைப்படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அவற்றை ஓடிடியில் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

குறிப்பாக திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் என்றால், அதனை ஓடிடியில் காண பலரும் காத்திருப்பார்கள். திரையரங்குகளில் சரியாக போகாத சில திரைப்படங்களுக்கு கூட, ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். சமீபத்தில் சில படங்களுக்கு அப்படி ஓடிடியில் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், இந்த மாதம் வெளியான பத்தா மற்றும் சிக்மா ஆகிய இரண்டு திரைப்படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீஸ் தேதி
விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. அதே அக்டோபர் 30-ஆம் தேதி ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவான சிக்மா படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri