நெஞ்சு வலியால் பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பவா செல்லத்துரை.. திடீர் திருப்பதால் ரசிகர்களுக்கு ஷாக்
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்று தான் அனன்யா வெளியேறினார். மக்களால் குறைந்த வாக்குகள் பெற்றதன் மூலம் முதல் எலிமினேஷன் நடைபெற்றது.
அனன்யா வெளியேறியதே பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். ஆனால், தற்போது மீண்டும் ஒரு ஷாக்கிங் செய்தி வெளிவந்துள்ளது.
பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆம், தன்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை என்றும், நெஞ்சு வலி வருகிறது என்றும் கூறி வீட்டிலிருந்து நான் வெளியேற வேண்டும் என பிக் பாஸ் இடம் முறையிட்டார்.
நேற்று இரவு பவா செல்லத்துரையை சமாதானம் செய்து நாளை வந்து தன்னுடைய முடிவை கூறும்படி பிக் பாஸ் கூறினார்.
வெளியேறிய பவா செல்லதுரை
அதன்படியே இன்று தன்னுடைய முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும், பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியேறியே ஆகவேண்டும் என்றும் பவா செல்லத்துரை கூறினார். இதன்பின் பிக் பாஸ் மற்றும் பவா செல்லத்துரை இடையே பேச்சு வார்த்தை நடந்தது.
ஆனால், இறுதியில் பவா செல்லத்துரை தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால், பிக் பாஸ் சரி என கூறி பவா செல்லத்துரையை வெளியே அனுப்பி வைத்துள்ளார். பவா செல்லத்துரையின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.
Bava Chelladurai walks out of the show.#BiggBossTamil7 pic.twitter.com/FmVG8sdHM4
— Bigg Boss Follower (@BBFollower7) October 9, 2023