பிக் பாஸ் 7 வீட்டுக்குள் வரும் இரண்டு சர்ச்சை பிரபலங்கள்? டிஆர்பி-க்கு பஞ்சம் இருக்காது
பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. வரும் அக்டோபர் 8ம் தேதி பிக் பாஸ் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற தகவலும் வந்து கொண்டிருக்கிறது. இணையத்தில் பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட் என வெளியாகி வருகிறது.
சர்ச்சை பிரபலங்கள்
பிக் பாஸ் வீட்டுக்கு பயில்வான் ரங்கநாதன் மற்றும் ரேகா நாயர் ஆகியோர் வர இருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல் பரவி வருகிறது.
இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் உடன் பயில்வனுக்கு இருக்கும் பிரச்சனை எல்லோருக்கும் தெரிந்தது தான். நடுரோட்டில் பயில்வான் சட்டையை பிடித்து ரேகா நாயர் சண்டையை போட்டதும் குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இருவரும் பிக் பாஸ் வந்தால் டிஆர்பிக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் அவர்கள் ஷோவுக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
