எங்கள் குடும்பத்திற்காக தயவுசெய்து வேண்டிக்கொள்ளுங்கள்... பிக்பாஸ் 10 ராகவ் மனைவி வீடியோ
பிக்பாஸ் 10
பிக்பாஸ் 10 விறுவிறுப்பின் உச்சமாக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. கடைசியாக ஹைஸ்ட் டாஸ்க் மூலம் முத்திரை பதித்து எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் பெற்றுள்ளார் டிடிஎஃப் வாசன்.
கடைசியாக பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து சாந்தினி வெளியேறி இருந்தார், அவர் எவிக்ஷன் ஆனதை விட அந்த எபிசோடில் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் விஷயம் காத்திருந்தது.

அதாவது நன்றாக விளையாடி மக்களின் மனதை வென்று வந்த ராகவ் உடல்நலக் குறைவால் பிக்பாஸ் 10வது சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் இருந்ததால் வெளியேற்றப்பட சக போட்டியாளர்களை தாண்டி ரசிகர்களும் வருந்தினார்கள்.
மனைவி வீடியோ
இந்த நிலையில் போட்டியாளர் ராகவின் மனைவி ப்ரீத்தா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ராகவ் பற்றி அனைவரும் அவரது உடல்நிலை குறித்து கேட்கிறீர்கள், ராகவ் பிக்பாஸ் வீட்டைவிட்டு வந்துவிட்டார்.

அவரை விட அவரது அம்மாவிற்கு ஒரு Ortho பிரச்சனை உள்ளது, 84 வயது அதனால் அவருக்கு முதலில் சர்ஜரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது, அதன்பிறகு தான் ராகவிற்கு சர்ஜரி நடத்த வேண்டும்.
நான் இப்போதைக்கு இந்தியாவிலேயே இல்லை, வெளிநாட்டில் இருக்கிறேன், இந்த மாத இறுதியில் வந்துவிடுவேன். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், இந்த கடுமையான நேரத்தில் எங்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வீடியோ வெளியிட்டுள்ளார்.