பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் அக்ஷரா ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணை ! வெளியான பரபரப்பு தகவல்..

tamil bb5 bigg boss season 5 Akshara Reddy bb ultimate
By Jeeva Feb 04, 2022 01:10 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி, பிக் பாஸ் இவர் 84 நாட்கள் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது அதே பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் வருண்க்கு ஜோடியாக திரைப்படத்தில் நடித்து வருகிறார் அக்ஷரா ரெட்டி.

இந்நிலையில் கோழிக்கோட்டில் நேற்று தங்க கடத்தல் வழக்கு சமந்தமாக அக்ஷராவிடம் அமலாக்கத்துறையினரால் விசாரணை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த 2013 ஆம் ஆண்டு கொச்சின் விமான நிலையத்தில் இரண்டு புர்கா அணிந்த பெண்கள் 20 கிலோகிராம் தங்கம் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஃபைஸ் என்பவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

இந்த வழக்கில் அக்சரா ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. முன்னதாக ஃபைஸிடம் நடைபெற்ற விசாரணையில் அவருக்கும் திரைத்துறையினருக்கும் சம்பந்தம் உள்ளது தெரியவந்துள்ளது.

அக்சரா ரெட்டியின் உண்மையான பெயர் ஸ்ராவ்யா சுதாகர் என்றும் தங்கக் கடத்தல் வழக்கில் மாட்டிக்கொண்டதால் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டதாகவும், அவர் பிக்பாஸில் கலந்துகொண்டபோது தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US