அந்த நேரத்தில் செத்துவிடலாம் என தோன்றியது- பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் எமோஷ்னல் பேச்சு
பிக்பாஸ்
செய்தி வாசிப்பாளராக சன் தொலைக்காட்சியில் பணியாற்றி மக்களின் பேராதரவை பெற்றவர் அனிதா சம்பத்.
அவர் அந்த தொலைக்காட்சியில் இருந்து விஜய் டிவிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வந்தார். நிகழ்ச்சியில் அவரின் ஸ்டைலில் மிகவும் மாஸாக விளையாடி இருந்தார், ஆனால் அவரது விளையாட்டு பலருக்கும் வெறுப்பை தான் ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
பிக்பாஸ் பிறகு புதிய வீடு கட்டியது, கணவருடன் வெளிநாடு பயணம், யூடியூப் சேனல், ஆடை விளம்பரம் என செம பிஸியாக இருக்கிறார் அனிதா சம்பத்.
எமோஷ்னல் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் அனிதா சம்பத் பிக்பாஸ், அப்பா இறப்பு என நிறைய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக போறேன் என்று சொன்னபோது சந்தோஷமாக போயிட்டு வா என அப்பா சொன்னார்.
80 நாட்கள் வீட்டில் இருந்தேன், 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தேன். 100 நாட்கள் கழிந்து என்னுடைய வீட்டிற்கு தந்தையை பார்க்கலாம் என சென்றபோது அப்பா இறந்து போன செய்தி தான் வந்தது.
பிக்பாஸ் என்னுடன் விளையாடிய சில போட்டியாளர்கள் ஒரு வார்த்தைக்கு கூட எங்க வீட்டுக்கு வந்து என்னிடம் பேசவே இல்லை, ஒரு சின்ன ஆறுதல் கூட சொல்லவில்லை. கோயிலுக்கு போயிட்டு வரும்போது நெஞ்சு வலி, அப்படியே இறந்துள்ளார்.
அந்த நேரத்தில் எனக்கு அதிகமான நெகட்டீவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருந்தது, அது என்னை மேலும் வேதனையில் ஆழ்த்தியது.
அப்பா இறப்பு, அந்த நேரத்தில் கூட நெகட்டீவ் கமெண்ட்ஸ், இதனால் நான் செத்துப் போய் விடலாமா என்று கூட நினைத்தேன் என்று அனிதா சம்பத் கண்ணீரோடு பேசியிருக்கிறார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
