கண்ணீரில் அனிதா! ஆறுதல் சொல்ல வீட்டுக்கு சென்ற பிக்பாஸ் பிரபலங்கள்! அப்பாவை இழந்த சோகம்!
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேற்று 80 நாட்கள் வரை உள்ளே இருந்து கடந்த வாரத்தில் குறைவான வாக்குகளால் வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டில் சில சர்ச்சைகளில் சிக்கி உணர்ச்சி பொங்க பேசி பரபரப்பை கிளப்பிய அனிதா தன் அப்பா பற்றி கூறியதை ரசிகர்களால் மறக்க முடியாது.
இப்படியான நிலையில் தன் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என திட்டமிருந்த அனிதா, பிக்பாஸை விட்டு வெளியேறியதும் அவரின் அப்பா மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை சோகத்தை தந்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு ஆறுதல் சொல்ல அவருடன் போட்டியாளர்களாக அர்ச்சனா, நிஷா, ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வீட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.