கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்! மோசமாக சென்றுகொண்டு இருக்கும் நிகழ்ச்சி..
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்று விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இதில் முதல் முறையாக ஹவுஸ்மேட்ஸ் மற்ற ஹவுஸ்மேட்ஸுக்காக விளையாடி வருகிறார்கள்.
இந்த போட்டியின் போது நிரூப், அக்ஷரா மற்றும் சிபி இடையே கடும் வாக்குவாதம் அரங்கேறியது. இதில் சிபி நிரூப்பிற்கு ஆதரவாக பேசி அக்ஷராவிடம் வாக்குவாதம் செய்தார்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முத்திப்போக கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினார் சிபி. இதனால் கடுப்பான அக்ஷரா, யாருக்கிட்ட என்ன பேசுற? என்ன வார்த்தை பேசுற? அறிவில்லையா என கேட்டு கத்தினார்.
இதனை பார்த்த ரசிகர்கள், சிபி மனதில் பழயணவற்றை வைத்து செயல்படுவதாகவும், பிக்பாஸின் நிகழ்ச்சி நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து போவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.