விவாகரத்து குறித்து அபிநய் மனைவி போட்ட பதிவு- ரசிகர்கள் ஷாக்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது பிக்பாஸ். கடைசியாக 5வது சீசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பானது.
பிக்பாஸில் அபிநய்
இந்த 5வது சீசன் மற்றும் அல்டிமேட் நிகழ்ச்சி என இரண்டிலும் கலந்துகொண்டவர் அபிநய். இவர் இரண்டிலுமே கடைசி வரை விளையாடவில்லை, பாதியிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
நிஜத்தில் திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவான இவர் பிக்பாஸ் 5வது சீசனில் நடிகை பாவ்னியுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் அவரது சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அபிநய் பிறந்தநாள் அண்மையில் வந்தபோது அவர் தனது மனைவியுடன் அழகான பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.

அபிநய் மனைவி போட்ட பதிவு
இந்த நிலையில் அபிநய் மனைவி அபர்ணா சமூக வலைதளத்தில் இருந்த தனது கணவர் பெயரை அண்மையில் நீக்கினார். இப்போது விவாகரத்து குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
எனவே ரசிகர்கள் நிஜமாகவே இருவரும் விவாகரத்து பெறுகிறார்களா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல சீரியல் நாயகியை காதலிக்கும் பாரதி கண்ணம்மா தொடர் நாயகன் அருண்- எந்த நடிகை தெரியுமா?
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan