புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகர் ஜி.பி.முத்து- காரின் விலை எவ்வளவு தெரியுமா?
ஜி.பி.முத்து
டிக்டாக் வந்தபோது அந்த ஆப் மூலம் பலரும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனார்கள்.
அப்படி மக்களிடம் ரீச் பெற்றவர்களில் ஒருவர் தான் ஜி.பி.முத்து. அதில் கிடைத்த பிரபலம் அப்படியே யூடியூப் தொடங்கி நிறைய வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார், ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் அவரால் வீட்டில் தாக்குபிடிக்க முடியவில்லை, வெளியே வந்துவிட்டார்.
அதன்பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.
புதிய கார்
எனது பரம்பரையிலேயே முதல் நபராக கார் வாங்கியது நான் தான் என கடந்த 2021ம் ஆண்டு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கியபோது வீடியோ வெளியிட்டார்.
தற்போது அவர் புதிதாக வெள்ளை நிற கார் ஒன்றை வாங்கிய வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளார். இந்த வெள்ளை நிற Kia காரின் விலை 12 முதல் 15 லட்சம் வரை விற்பனையாகி வருவதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
