புதிய சீரியலில் நடிக்கிறாரா பிக்பாஸ் புகழ் ராஜு- ஹிட் தொடர் நடிகர்களுடன் அவர் எடுத்த புகைப்படம்
பிக்பாஸ் 5வது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வானார், அதில் தமிழக மக்கள் அனைவருக்கும் சந்தோஷம் தான்.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்ததும் அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் தாங்கள் கமிட்டான படங்கள் குறித்து உடனே தகவல் வெளியிடுவார்கள்.
ஆனால் இந்த பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒருவர் கூட இன்னும் எந்த பட அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை பட வாய்ப்புகள் அவர் வெளியிடவில்லையோ இல்லை போட்டியாளர்கள் எதுவும் அறிவிக்கவில்லையோ என தெரியவில்லை.
இந்த நேரத்தில் பிக்பாஸ் வின்னர் ராஜு பிரபல சீரியல் நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்து வெளியிட அந்த தொடரில் சின்ன வேடத்தில் நடிக்கிறாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.