நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல்
ஷிவானி நாராயணன்
தமிழ் சின்னத்திரையில் 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
அதன்பின் சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
பின் 2020ம் ஆண்டு விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார், ஆனால் அந்த விளையாட்டை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என அவரது அம்மாவே நிகழ்ச்சிக்கு வந்து திட்டியிருந்தார்.
பிக்பாஸ் முன் இன்ஸ்டாவில் தினமும் ஒரு போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தார்.
பேட்டி
இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலமும், சீரியல் நடிகையுமான ஷிவானி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், இப்போது கொஞ்ச நாட்களாக எனக்கு இழப்பு குறித்தான பயம் அதிகமாக வந்திருக்கிறது, அண்மையில் என்னுடைய தாத்தா, பாட்டி இறந்து போனார்கள், அது என்னை மிகவும் பாதித்துவிட்டது.
கிட்டத்தட்ட 3 மாதங்கள் என்னால் அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை, அதற்காக தான் இந்த பிரேக். பிக்பாஸ் பயணத்தில் நான் இன்னும் கொஞ்சம் புரிதலோடு கையாண்டிருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது என கூறியுள்ளார்.