திருமண நாளில் சினேகன் சொன்ன வார்த்தை, கன்னிகா கொடுத்த ரியாக்ஷன்... வைரலாகும் வீடியோ
சினேகன்-கன்னிகா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலம் ஆனவர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் சினேகன்.
இவர் இந்நிகழ்ச்சிக்குள் நுழைவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார், ஆனால் இந்த ஷோவிற்கு வந்த பிறகே இவரை பற்றிய முழு அடையாளம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
2500 பாடலுக்கு மேல் பாடல்களை எழுதி இருக்கிறார், அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.
திருமணம்
பிக்பாஸ் பிறகு சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.
கன்னிகா கல்யாண வீடு போன்ற தொடரிலும், தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் சினேகன்-கன்னிகா இருவரும் தங்களது 3வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்கள்.
அப்போது சினேகன்-கன்னிகா இருவரும் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயார் ஆகிட்டோம் என்றனர்.
உன்ன மாதிரி ஒரு பொண்ணு பெத்து கொடுத்துட்டு நீ கௌம்பிட்டே இருன்னு சொல்றேன் என சினேகன் கூற கன்னிகா வெட்கத்தில் சிரித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
