இந்த முறை Bb ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் இவரா?
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள். நிகழ்ச்சியில் பிக்பாஸில் பங்குபெற்றவர்கள் ஜோடி சேர்ந்து நடனம் ஆடி வந்தார்கள்.
கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சில பிரச்சனைகள் எல்லாம் இருந்தன.
வனிதா சண்டை
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எல்லோருக்கும் முதலில் ஜோடி கிடைத்தாலும் வனிதாவிற்கு மட்டும் கிடைக்கவில்லையாம். பின்பு தான் சுரேஷ் அவர்களை அதிகம் பேசி ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்கள்.
இதனை நிகழ்ச்சியிலேயே கூறினார், சுரேஷ் நடனம் ஆட வந்த பிறகு வனிதா சண்டையில் இறங்கினார்.
அவருக்கு நடுவர் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி வெளியேறினார்.
புதிய பிபி ஜோடிகள்
இந்த முறை புதிய ஜோடிகள் இணைந்துள்ளார்கள். இந்த சீசன் மிகவும் கலகலப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு நடுவராக
இந்த முறையும் ரம்யா கிருஷ்ணன் வருகிறார், அடுத்து வரப்போகும் இன்னொர நடுவர் குறித்து தான் சரியாக தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் இன்னொரு நடுவராக வருகிறார் என கூறப்படுகிறது.
சந்தோஷத்தில் இருக்கும் மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பம்- காரணம் வீடியோவுடன் இதோ