பிரமாண்டமாய் துவங்கிய பிபி ஜோடிகள் சீசன் 2.. களைகட்டும் போட்டி
விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் சீசன் 1 வெற்றியை தொடர்ந்து தற்போது பிரமாண்டமாய் துவங்கியுள்ளது பிபி ஜோடிகள் சீசன் 2.
இதில் அமீர் பாவனி, ஆரத்தி - அவரது கணவர் கணேஷ், இசைவாணி வேல்முருகன், ஜக்கி - அவரது காதலர் தேவ், அபிஷேக் - சுருதி, சுஜா வருநீ அவரது கணவர் சிவா குமார், தாமரை - அவரது கணவர் பார்த்தசாரதி என பலரும் இதில் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளார்கள்.
சீசன் ஒன்றை தொடர்ந்து பிபி ஜோடிகள் சீசன் இரண்டிற்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக வந்துள்ளார். அவருடன் இணைந்து போட்டியாளர்களை வழிநடத்தி செல்ல, நடுவராக களமிறங்கியுள்ளார் நடன இயக்குனர் சதீஸ்.
மேலும், இந்த நிகழ்ச்சியை ராஜு மற்றும் பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
கடந்த 8ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ஞாயற்று கிழமை மாலை 7 மணிக்கு காண தவறாதீர்கள்.