தொடங்கியது பிக்பாஸ் சீசன் 5-ன் ஷூட்டிங் ! இணையத்தில் கசிந்த புகைப்படம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடம் பெரியளவில் பிரபலமாகிவிடுவார்கள்.
அந்த வகையில் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று நடந்து முடிந்தது.
இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது அதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை கண்ட ஒரு சிலர் இது பிக்பாஸ் ஷூட்டிங் இல்லை என்றும் கூறிவருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்