பிக்பாஸ் நிகழ்ச்சி மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்த வனிதா ! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் கடைசி சீசனான பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் முடிந்தது, இதில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை தட்டிச்சென்றார்.
அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட்ட நிகழ்ச்சி தொடங்கப்பட்டு அது 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து வனிதா திடீரென வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தால் அதிகமாக மனதளவில் பாதிக்கப்படுவதால் வெளியேறுவதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்து பேட்டியளித்துள்ள வனிதா பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் கூறியதாவது "பிக்பாஸ் நிகழ்ச்சி ஒழுங்கற்ற முறையில் நடத்தப்பட்டது மற்றும் போட்டியாளர்களும் மோசமாக நடந்துகொண்டது மன உளைச்சலை ஏற்படுத்தியது".
மேலும் வனிதா கமல்ஹாசனும் இதே காரணத்திற்காக தான் சந்தோஷமாக இல்லை என்றும் அதனால் தான் அவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறியுள்ளார்.