ஒரே போடு! தெறிக்கவிட்ட பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி! அதிரடியான பதில்! ரசிகர் கேட்ட அந்த ஒரு கேள்வி!
டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்துகொண்டு Eviction ல் வெளியேறியவர்களில் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தி.
ஆரம்பகாலங்களில் சவாலான போட்டியாளராக இருந்தவர் சுரேஷ். அதே வேளையில் காரசாரமாகவும், கலகப்பாக பேசி வந்தார். மக்கள் பலருக்கும் பிடித்த நபராகவும், போட்டியாளர்களுக்கு நன்கு சமைத்து போடும் நபராகவும் இருந்தார்.
அப்படியானவர் சுமங்கலி பிரச்சனை, எச்சில் தெரிப்பது என விசயங்கள் சர்ச்சையாக மாறி அவர் வெளியேறியதற்கு காரணம் அனிதா என்றும் சொல்லலாம்.
இதுவே சுரேஷ் ரசிகர்களின் மனநிலையும். அதே வேளை கேபிரியல்லா, சுரேஷ் பாச உறவு பலரையும் கவர்ந்தது. அவருக்காக கேபிரியல்லா அழுததை மறக்க முடியாது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் wild Card மீண்டும் சுரேஷ் செல்வாரா என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் இதுவரை அது நிகழவில்லை.
நிகழ்ச்சியில் இறுதி நாளை நெருங்கிவிட்டது. தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டவர்களில் சிலர் இறுதி நிகழ்சிக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கிறார்களாம். அதில் சுரேஷ் சக்ரவர்த்தியும் ஒருவர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் சுரேஷ் தாத்தா நான் உரிமையோட கேக்குறேன், பிக்பாஸ்ல போய் சனம் ஷெட்டியோட பவர் என்னனு சொல்லுங்க, பாலாவ உங்க பையனா பாத்தேனு சொன்னீங்கள, போய் அட்வைஸ் பண்ணுங்க, அவன் பன்ற தப்ப எடுத்து சொல்லுங்க என கூறியுள்ளார்.
இதற்கு சுரேஷ் யாரும் என் மகனுக்கு இணையில்லை என்பதை உணர்ந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.
I have realised nobody can replace my own son
— Suresh Chakravarthy (@susrisu) January 3, 2021