பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.25 லட்சத்தை எடுத்து செல்லும் அடுத்த போட்டியாளர் !
BB அல்டிமேட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்தது.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து 24 மணிநேரமும் BB அல்டிமேட் நிகழ்ச்சி புதிய பரிமானத்தில், ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென விலகினார், தற்போது அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
சிம்பு அளிக்கும் இரண்டாவது வாய்ப்பு
இந்நிலையில் சமீபத்தில் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து சுருதி ரூ.15 லட்சம் மதிப்பிலான பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிற்கு விட்டு வெளியேறினார்.
ஆனால் தற்போது சிம்பு இந்த பெட்டியை இவ்வளவு சீக்கிரம் யாரும் எடுத்துக்கொண்டு வரக்கூடாது. மேலும் ஒருவர் இந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். கடைசியாக இந்த பெட்டிக்கு வரவிருக்கும் மதிப்பு ரூ.25 லட்சம் என போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.