திருமணம் ஆகியும் தாலி ஏன் போடல.. பிக் பாஸ் தாமரை செல்வி சொன்ன காரணம்
கிராமங்களில் நடக்கும் மேடை நாடக நடிகையாக இருந்து விஜய் டிவியின் பிக் பாஸ் 5ம் சீசனிக்கு போட்டியாளராக வந்தவர் தாமரை செல்வி. அவர் அந்த ஷோவில் finale வரை வரவில்லை என்றாலும் அவருக்கு அதிகம் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் தாமரை செல்வி. இந்த ஷோ 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது என்பதால் போட்டியாளர்கள் பற்றிய பல்வேறு விவரங்கள் வெளிவருகிறது.
தாமரை செல்வி திருமணம் ஆன பிறகும் பிக் பாஸ் வீட்டில் தாலி அணியாமல் தான் இருக்கிறார். அது ஏன் என ஜூலி கேட்க தான் வெளியில் சென்று தான் தாலி வாங்கி அணியவேண்டும் என சொல்லி இருக்கிறார்.
நாங்கள் திருமணம் செய்தபோது கவரிங் தாலி வாங்கி தான் கல்யாணம் செய்துகொண்டோம். கவரிங் எனக்கு செட் ஆகல.. அதனால் அதை எடுத்துவைத்துவிட்டேன். வெளியில் சென்ற பிறகு தான் தாலி வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும் என தாமரை கூறி இருக்கிறார்.