பிக் பாஸ் Ultimate போட்டியாளர்களின் ஒரு நாளைக்கான சம்பளம் ! இத்தனை ஆயிரமா..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அண்மையில் தான் முடிவடைந்தது.
இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஜு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி சென்றார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
இதனிடையே பிக் பாஸ் முடிந்த கொஞ்ச நாட்களிலே BB Ultimate நிகழ்ச்சியை தொடங்கிவிட்டனர்.
ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ள BB Ultimate நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் 14 போட்டியாளர்கள் குறித்த விவரமும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது BB Ultimate போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி சினேகன், வனிதா ஒரு நாளைக்கு ரூ.45,000 இருந்து ரூ.50,000 சம்பளம் பெறுகிறார்களாம், தாடி பாலாஜி ரூ.40,000, ஜூலி ரூ.30,000 சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.