இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறுவது இவரா?- வனிதாவால் அதிரடி மாற்றம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவ்வளவாக சுவாரஸ்யமான விளையாட்டுகள் கொடுக்கவில்லை என்றாலும் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிற்து.
ஆனால் இந்த சனி-ஞாயிறு நிகழ்ச்சி மிகவும் அட்டகாசமாக போகப்போகிறது, காரணம் முதன்முறையாக நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
அவரை நிகழ்ச்சியில் காண ரசிகர்கள் படு ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த வாரத்தில் வனிதா தானாகவே முன்வந்து தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என பிக்பாஸிடம் போராடி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
இதனால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா இல்லையா என ரசிகர்கள் யோசித்தது போல் யாரும் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறவில்லையாம்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.