அபிராமியுடன் காதலில் இருந்தேன், இப்போது அவர் மாறிவிட்டார்.. வெளிப்படையாக பேசிய நிரூப்
பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வந்த நிரூப் தற்போது பிபி அல்டிமேட் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவர் யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் என்று தான் பிக் பாஸ் 5 ஷோவில் அவர் களமிறங்கினார். அந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த யாஷிகா பற்றியும் அவர் வெளிப்படையாக பேசி இருந்தார்.
இந்நிலையில் பிபி அல்டிமேட் ஷோவில் இன்று முதல் நாளே நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் நிரூப் அபிராமி வெங்கடாசலத்தை நாமினேட் செய்தார். "நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது இருந்த அபிராமி இல்லை இது, அதிகம் மாறிவிட்டார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. அவரிடம் நான் இங்கு பேசவும் இல்லை. அதனால் அவரை நாமினேட் செய்கிறேன்" என சொல்லி நாமினேட் செய்கிறார் நிரூப்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நிரூப் மற்றும் அபிராமி ஜோடியாக கட்டிப்பிடித்து கொண்டிருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.