இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார்?- வெளிவந்த தகவல்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற புதிய விஷயத்துடன் தொடங்கப்பட்டது.
இதில் பங்குபெற்ற அனைவரும் நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய முகங்கள் தான், எனவே அவர்கள் எப்படி நிகழ்ச்சியில் இருப்பார்கள், என்னென்ன நடக்கும் என்பது நமக்கே கொஞ்சம் தெரிந்திருக்கும்.
நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் மற்றும் வனிதா தானாகவே முடிவு எடுத்து வெளியேறிவிட்டார்.
இந்த வாரம் முதல் கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார், அதுவே ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தற்போது இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற பெரிய ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. ஓட்டிங் விவரப்படி தாடி பாலாஜி, சினேகன், ஸ்ருதி ஆகியோர் ஒரே லெவலில் உள்ளார்கள்.
இவர்கள் 3 பேரில் யாராவது ஒருவர் வெளியேறுவது நிச்சயம் என்கின்றனர்.