தாமரை - அபினை இடையே வெடித்த மோதல்! பிக் பாஸ் அல்டிமேட் புது ப்ரொமோ
விஜய் டிவியின் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ 24x7 ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஒரு மணி நேர ஷோ இரவில் வெளியாகி வருகிறது.
தற்போது போட்டியாளர்களுக்கு பிரெஸ் மீட் டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் பல சண்டை சச்சரவும் வர தொடங்கி இருக்கிறது. வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே கடும் வாக்குவாதம் நடந்தது இதற்கு முன் வந்த ப்ரொமோவில் காட்டப்பட்ட நிலையில் தற்போது தாமரை - அபினை இடையே மோதல் வெடித்து இருக்கிறது.
சுருதியை தாமரை கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போது அபினை கொடுத்து இருக்கும் ரியாக்ஷன் பார்த்து தாமரை பொங்கி இருக்கிறார். அது பற்றி அவர் கேட்க பெரிய சண்டை வெடித்து இருக்கிறது. ப்ரொமோ இதோ..
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day3 #Promo3 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/hEcnh0WqaY
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 2, 2022