பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு தொகுப்பாளர் ஆனதன் பின்னணி ! என்ன தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 முடிந்ததை தொடர்ந்து பிக் பாஸ் Ultimate தொடங்கியது.
24 மணிநேரமும் நேரடியாக ஹாட்ஸ்டார் பிரைமில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே திடீரென கமல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ச்சியான சினிமா ஷூட்டிங் காரணமாக நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுவதால் இந்த முடிவு என கமல் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிக் பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திப்பதாகவும் கமல் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே அவருக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் இனி தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்தது, ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கமல் விலகியதுமே அந்த இடத்துக்கு நடிகர் சிம்பு பெயரைத்தான் பரிசீலித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த பின்னணி என்னவென்றால் "டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் தலைமைப் பொறுப்பிலும் விஜய் டிவி-ன் முக்கிய பிரமுகருமாகவும் உள்ள பிரதீப் மில்ராய் பீட்டர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பராம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சிம்பு சிபாரிசு செய்த நபர்கள் போட்டியாளர்களாக அனுமதிக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் தற்போது பிரதீப் மில்ராய் கேட்டுக் கொண்டதன் பேரிலே பிக் பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்க சிம்பு சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது.