இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸிற்கும் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கும் சில வித்தியாசங்கள் தான். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும், சிகரெட் அறை எல்லாம் காட்டுகிறார்கள்.
நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி என இரண்டு பேரும் வெளியேறிவிட்டார்கள்.
இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்களிடம் பெரிய கேள்வி இருக்கிறது. இதுவரை போட்டியாளர்களுக்கு வந்துள்ள வாக்குப்படி அபிநய் குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் உள்ளார்.
அவருக்கு அடுத்து சினேகன் இருக்கிறார், இந்த வாரம் வேறு டபுள் எவிக்ஷன் என்ற பேச்சு அடிபடுகிறது.
எனவே இந்த வாரம் அபிநய், சினேகன் இருவரும் வெளியேறுகிறார்களா அல்லது நிகழ்ச்சியில் ஒருவர் வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.