பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 15 லட்சத்தை அடித்தது யார்?- அட இவரா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 24 மணி நேரமும் ஒளிபரப்பாக 5 சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.
போட்டியில் நடந்த விஷயங்கள்
பிக்பாஸ் அல்டிமேட் ஒன்றும் சொல்லும் அளவிற்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை. எல்லோரும் விளையாட்டை உண்மையாக விளையாடாமல் ஒருமாதிரி தான் நடத்தினர்.
சொல்லப்போனால் எல்லோரும் Safe Game விளையாடினார்கள் என்று கூறலாம்.
பண பெட்டியை அடித்த பிரபலம்
தற்போது இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 10ம் தேதி நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம். நிகழ்ச்சி முடிகிறதே என்ற கவலையை விட சிம்புவை இனி ஜாலியாக வாரா வாரம் பார்க்க முடியாதே என்ற சோகம் தான் ரசிகர்களுக்கு அதிகம்.
இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் கொடுத்த 2 டாஸ்க்குகளை மிகவும் கடினமாக விளையாடி தற்போது ரூ. 15 லட்சத்தை தட்டி சென்றுள்ளார் ஸ்ருதி. அவரது விளையாட்டை மக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
தாய் பாலில் செய்யப்பட்ட ஒரு சூப்பரான விஷயம்- ஆல்யாவிற்கு சஞ்சீவ் கொடுத்த பரிசு