பிக்பாஸ் பிறகு புதிய படத்தில் கமிட்டாகியுள்ள அக்ஷாரா?- யாருடன் நடிக்கிறார் தெரியுமா?
பிக்பாஸ் 5வது சீசனில் பங்குபெற்றதன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியுள்ளார் அக்ஷாரா.
ஆரம்பத்தில் இவர் அமைதியானவர் போல் இருந்தார், பின் நாட்கள் செல்ல செல்ல அவரது உண்மை முகம் வெளியாகி இருந்தது. நிறைய சண்டைகள் எல்லாம் போட்டு வந்தார்.
கடந்த வாரத்திற்கு முன் வாரம் அக்ஷாரா மற்றும் வருண் என இருவரும் ஒன்றாக வீட்டைவிட்டு வெளியேறினார்கள். அதில் இருந்து இருவரும் அடிக்கடி வெளியே சென்று ஒன்றாக புகைப்படம் எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அக்ஷாரா மற்றும் வருண் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க இருப்பதாகவும், பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.