பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் அமீர் இந்த படத்தில் Cameo ரோலில் நடித்துள்ளாரா?- இதோ முழு விவரம்
பிக்பாஸ் 5து சீசன் இறுதி நாட்களை எட்டிவிட்டது. இப்போது வீட்டில் 7 பேர் வரை உள்ளனர்.
இதில் இன்று அல்லது நாளை ஒருவர் பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுவார் என்று நாம் எதிர்ப்பார்த்த நிரையில் ரூ. 12 லட்சத்துடன் சிபி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என தகவல் வந்துள்ளது.
ஆனால் அனைவருமே அமீர் தான் பிக்பாஸ் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறுவார் என எல்லோரும் நினைத்தார்கள். டிக்கெட் டூ பைனல் டாஸ்கில் வென்று பைனலுக்கு முதலில் தேர்வானதே அமீர் தான்.
அமீர் ஒரு நடன கலைஞர் என்பதும் அவர் நடன கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு பிரபுதேவா போல் பெரிய நடன கலைஞர் ஆக வேண்டும் என்பது பெரிய ஆசை.
அமீர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த தாதா 87 படத்தில் நடன கலைஞராக இருந்துள்ளார், ஒரு பாடலில் தோன்றி நடித்திருக்கிறார்.