பிக்பாஸ் புகழ் சிபி நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருந்து வருகிறார் சிபி. கேரளாவில் பிறந்த இவர் பின் சென்னைக்கு வந்து இங்கே குறும்படங்கள் எடுப்பது என சினிமாவில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி படத்தில் சின்ன ரோலில் நடித்த இவர் வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.
அப்படத்தில் சிபியின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இப்படத்திற்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த சிபி எதற்கும் துணிந்தவர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இப்போது பிக்பாஸில் ஒரு போட்டியாளராக இருக்கிறார், இவர் இந்த சீசனை ஜெயிக்கவும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருதி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் தான் சிபி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அனிருத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்,