இந்த வாரம் பிக்பாஸ் 5 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?- வாக்கு எண்ணிக்கை விவரம்
பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக ஓடுகிறது. 94 நாட்களை கடந்து ஓடும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்து வருகிறார்.
அந்த பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம். முதலில் ரூ. 3 லட்சம், அடுத்து ரூ. 5 லட்சம் இப்போது ரூ. 7 லட்சம் வரை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை யாருமே எடுக்கவில்லை என்பது போல் தெரிகிறது. காரணம் இப்போது வந்த புதிய புரொமோவில் பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுக்க அதை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.
எனவே இந்த பணத்தை பிக்பாஸ் மீண்டும் எடுத்துக் கொண்டார் என்பது தெரிகிறது.
தற்போது இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார் என்ற பெரிய கேள்வி மக்களிடம் உள்ளது. இதுவரை வந்த ஓட்டிங் விவரத்தை வைத்து பார்க்கையில் தாமரை மற்றும் பாவ்னிக்கு குறைவான வாக்குகள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.