பிக்பாஸ் கொடுத்த டாஸ்க், திடீரென வாந்தி எடுக்கும் போட்டியாளர்கள்- புரொமோ வீடியோ
பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களை கடந்து ஓடுகிறது. எனவே போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் யார் முதல் இடத்தில் நிற்க வேண்டும் என்ற கடும் போட்டி நடந்தது, நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்குமே தெரியும்.
இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க ஒரு டாஸ்க் வைக்கிறார் பிக்பாஸ். ஒரு பஸ் வைக்கப்பட்டுள்ளது, அதில் போட்டியாளர்களை வெளியே அனுப்பும் வகையில் நிறைய மோசமான விஷயங்கள் நடக்கிறது.
நாம் புரொமோவில் பார்க்க மழை பெய்வது போஸ் தெரிகிறது, ஆனால் அந்த தண்ணீர் மோசமான வாடையுடன் இருக்கும் என போட்டியாளர்கள் முகம் பார்த்தாலே தெரிகிறது.
இதில் யார் கடைசி வரை உள்ளார், ஜெயிப்பது யார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.